Friday, December,30, 2011இலங்கை::வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து, காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் கொண்ட சுயாட்சியை வழங்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதரங்களிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் வெளிநாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச நேரத்தை ஒதுக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில, எதிர்வரும், 17, 18, 19 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்தன. காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்திருந்ததை தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொள்வதில் அர்த்தமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment