Friday, December 30, 2011

இராணுவ வீரரொருவரின் துப்பாக்கியும் ரவைகளும் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை!

Friday, December,30, 2011
இலங்கை::மதவாச்சி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரிடம் இருந்த ரி 56 ரக துப்பாக்கியும் ரவைகளும் காணாமற்போனமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரருடைய துப்பாக்கியே காணாமற்போயுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment