Friday, December,30, 2011இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கூடிய தபால் முத்திரை பிரான்சில் வெளியிடப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், தனது எதிர்ப்பை பிரான்ஸ் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது!
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கூடிய தபால் முத்திரை பிரான்சில் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பிரான்ஸில் நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளனர் இதற்கு பிரான்ஸ் அஞ்சல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தவிர புலிகளின் தமிழீழ வரைப்படத்துடன் கூடிய முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முத்திரைகள் நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த முத்திரை வெளியிடப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், தனது எதிர்ப்பை பிரான்ஸ் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment