Monday, December 26, 2011

TNA கட்சியும்-UNP கட்சியும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்தை தடுத்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது!

Monday,December, 26,2011
இலங்கை:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்தை தடுத்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தேசயி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தடை ஏற்படுத்தி வவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனைத் திட்டத்திற்கு சகல அரசியல் கட்சிகளும் முதலில் இணக்கம் தெரிவித்திருந்தாக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக குறித்த கட்சிகள் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனைத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டுமென சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய கட்சிகளும் வடக்கில் வெற்றியீட்டியிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment