Monday, December 26, 2011

தமிழ் அமைப்புகளின் கோரிக்கை : நடிகை சங்கீதா கிரிஷ் தம்பதி நிராகரிப்பு!

Monday,December, 26,2011
சென்னை : தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை நடிகை சங்கீதா மற்றும் பாடகர் கிரிஷ் தம்பதியினர் நிராகரித்துள்ளனர். மேலும் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஸ்விட்சர்லாந்து செல்ல இருப்பதாகவும் சங்கீதா, கிரிஷ் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பால் நடிகர் ஜீவா ஏற்கனவே ஸ்விட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழு நடத்துவதாக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கருணா குழு நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் சங்கீதா, கிரிஷ் தம்பதியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment