Monday, December 26, 2011

பிரித்தானிய பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த தங்காலை பிரதேச சபை தலைவர் பொலிஸில் சரண்!

Monday,December, 26,2011
இலங்கை::தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப இன்றிரவு 8.15 அளவில் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்படவிருந்த நிலையில் இன்று சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment