Thursday, December 8, 2011

புலிகளுடன் தொடர்புகளைப் பேணும் புலம்பெயர் தமிழர்கள் உண்டியல் எனப்படும் சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிமாற்று வியாபாரம் மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புகின்றனர்- திவயின!

Thursday,December, 08, 2011
இலங்கை: கொழும்பின் சில வீதிகளில் தொடர்ந்தும் உண்டியல் எனப்படும் சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிமாற்று வியாபாரம் நடைபெற்று வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.ஜம்பட்டா வீதி, செட்டியார் தெரு, ரெக்லமேஷன் வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்தும் உண்டியல் வர்த்தகம் நடைபெற்று வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணும் புலம்பெயர் தமிழர்கள் உண்டியல் முறைமையைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கின்றனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இதன்மூலம் சுவிட்சர்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளிலிருந்து வடக்கின் சில பிரதேசங்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உண்டியல் பணப்பரிமாற்று நடவடிக்கைகளினால் வங்கிகளுக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகைப் பணம இழக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில் தடைகளை மீறி சிலர் தொடர்ச்சியாக உண்டியல் பணப்பரிமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment