Thursday,December, 08, 2011இலங்கை: தனமல்வில ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு பேர் பலியாகினர்
நேற்று இரவு வீட்டுக்கு வந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த அம்மா, அப்பா மற்றும் அவர்களது இரு பெண்பிள்ளைகளையும் சுட்டுள்ளார்.
சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி பலியானர்.
படுகாயமடைந்த மற்றைய சகோதரி தற்போது ரத்திரபுரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தம்மைதாமே சுட்டுக்கொண்டு பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
காதல் தொடர்பான பிரச்சினையே இந்த சம்பத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது...
பிரதேச வீடொன்றினுள் நேற்றிரவு நுழைந்த ஒருவர் அங்கிருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்மார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய நபர் பின்னர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
சம்பவத்தில் 60 முதல் 65 வயதுக்குட்பட்ட தம்பதியினரும் 20 வயதான அவர்களின் மகளுமே உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment