Thursday, December 8, 2011

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது!

Thursday,December, 08, 2011
இலங்கை: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. மனித உரிமை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்தக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகள் குறித்து இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர், இலங்கை மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மனித உரிமைப் பாதுகாப்பு குறித்த தேசிய செயற்திட்டம் குறித்து அமைச்சர் சமரசிங்க இதன் போது விளக்கமளித்துள்ளார்.

பாராளுமன்ற பாராளுமன்றத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹோவிட், டேவிட் மார்டின் மற்றும் அன்னா கோமஸ் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். குறித்த ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவினர் வடக்கின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இன்றைய தினம் மெனிக்பாம் முகாமிற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment