Thursday,December, 08, 2011பெய்ஜிங்: சீனாவில் ரூ.37.2 கோடி மதிப்பிலான வைரங்கள் கடத்தியதற்காக 10 இந்தியர்களுக்கு 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2010 ஜனவரியில் 22 இந்திய வைர வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங் கும்பலிடம் வைரங்களை பெற்று சீன சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்றதால் கைது செய்ததாக காரணம் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஷென்ஜென் மக்கள் நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் 10 இந்தியர்களுக்கு கைதான காலம் உட்பட 2 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், 12 பேரை நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிலருக்கு ஸி24 லட்சம் முதல் ஸி80 லட்சம் வரை அபராதம் விதித்தது.
இவர்களில் அதிகமானோர் குஜராத்தியர்கள். இவர்களை விரைவில் விடுவிக்க சீனாவுக்கான இந்திய தூதர், துணை தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வைர வியாபாரிகளை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் சீனாவிடம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment