உலகின் மிகக் கொடூரமான LTTE பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிப்பதில் இலங்கை பாதுகாப்புப் படையினர் பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர்-மாலைதீவு ஜனாதிபதி மஹ்மூத் நஸீட்!


Tuesday, December,27, 2011இலங்கை::உலகின் மிகக் கொடூரமான LTTE பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிப்பதில் இலங்கை பாதுகாப்புப் படையினர் பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர் என்று மாலைதீவு ஜனாதிபதி மஹ்மூத் நஸீட் தெரிவித்துள்ளார்.நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் மாபெரும் பொறுப்பும் இலங்கையின் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சிளய முடித்துக் கொண்டு வெளியேறிய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களைச் சட்ட விரோதமாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துச் செல்லல், கடற்கொள்ளைக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை என்பனவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு முக்கிய பங்கு உள்ளதாகத் தெரிவித்த அவர், மாலைதீவு இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் பயிற்சியளித்தததையிட்டு அவர் நன்றியைத் தெரிவித்தார்...
இராணுவ பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பில், முதற் தடவையாக வெளிநாட்டு ஜனாதிபதி பங்கேற்பு!
இலங்கை::இலங்கை மற்றும் மாலைத்தீவின் இருதரப்பு நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் மிகவும் உறுதியான பாதையில் சென்றுக்கொண்டிருக்கின்றது. இதனை வெளிப்படுத்தும் முகமாக தியத்தலாவில் இன்று(டிச-27) நடைபெறவுள்ள இராணுவத்தினரின் பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி அதிமேதகு மொஹமட் நஷீட் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இதில் பங்கேற்கும் முகமாக மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று(டிச-26) கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி, விசேட ஹெலி மூலம் நேற்றுக் காலை தியத்தலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தியத்தலாவையிவ் வைத்து இராணுவதளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவால் வரவேற்கப்பட்டார்
இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவர் இராணுவத்தினரின் பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பில் கலந்துகொள்ளவது இதுவே முதற்தடவையாகும்.
அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி, இராணுவத் தளபதியுடன் விசேட பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டதுடன், தியத்தலாவையில் இடம்பெற்ற பல்வேறு இராணுவ நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டார்.
தியத்தலாவையில் இன்று நடைபெறும் பிரியாவிடை நிகழ்வில் இராணுவ பயிற்சிகளை முடித்துக்கொண்ட 194 அதிகாரிகள் வெளியேறவுள்ளனர்.
No comments:
Post a Comment