Tuesday, December,27, 2011இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிங்களவர்கள் தொடர்பில் எந்தவொரு விடயமும் சுட்டிக்காட்டப்படாமை பாரிய குறைபாடாகும் என ஹெல உருமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கத்தினரால் தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என 9878 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித பரிந்துரையும் இணைக்கப்படவில்லை எனவும் ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யினர் ஆயுதங்களை வைத்திருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, எதற்காக ஆயுதம் ஏந்தினார் என்பது குறித்தோ அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்தோ நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment