Tuesday, December,27, 2011இலங்கை::மன்னார் வளைகுடாவில் இரண்டாம் கட்ட மசகு எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய நிறுவனம் இரண்டாம் கட்ட ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய வளச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
முதலாவது ஆய்வின் போது மூன்று எண்ணெய்க் கிணறுகள் அகழ்விற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு எண்ணெய்க் கிணறுகளில் எரிவாயு படிமங்கள் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த எண்ணெய் கிணறுகளில் இருந்து வர்த்தக ரீதியான எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்படுவதாக பெற்றோலிய வளச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்ய நிறுவனம் ஒன்றினால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் ஆய்வுத் தகவல்களை பரீசீலிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடாவிலுள்ள ஒன்பது இடங்கள் எண்ணெய் வள செயலகம் ஆய்வுகளுக்காக இணங்காணப்பட்டுள்ளதென பெற்றோலிய வள செயலகம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment