Monday, December 05, 2011கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை அமெரிக்க டொலர்களுடன் பங்களாதேஷ் பிரஜை கைது!
பெருந்தொகையான அமெரிக்க டொலர்களுடன் பங்களாதேஷ் செல்வதற்கு முற்பட்ட சந்தேக நபரொருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கொழும்பிலிருந்து பங்களாதேஷ் செல்வதற்கு முற்பட்ட மேற்படி நபர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரின் கைப்பையை சோதனையிட்ட போது அதில் இலங்கை ரூபாப்படி ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை வைத்திருந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
45 வயது மதிக்கத்தக்க பங்களாதேஷ் நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment