Monday, December 05, 2011புதுடெல்லி : மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜூடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து சுஷ்மா ஸ்வராஜுடன் பிரணாப் முகர்ஜி விவாதம் நடத்தினார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்தும் சுஷ்மாவுடன் விவாதம் நடைபெற்றது. இதன் விளைவாக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் உள்ள முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க மத்திய அரசு தற்காலிகமாக இம்முடிவை கைவிட இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படும் வரை அந்நிய முதலீடுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று பிரணாப் உறுதியளித்ததையடுத்து மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் முடிவை ஏற்றுகொண்டுள்ளார். அந்நிய முதலீடு தொடர்பாக மத்திய அரசின் நிலை பற்றி அறிக்கை அளிக்க சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்நிய முதலீடு தொடர்பான அறிவிப்பு புதன் கிழமை மக்களவையில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment