Wednesday, December 7, 2011

இலங்கையர்களைச் சந்திப்பதற்காக இலங்கை எம்.பிக்கள் குழு ஒன்று லண்டன் நோக்கிப் பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது!




Wednesday,December,07,2011
இலங்கையர்களைச் சந்திப்பதற்காக இலங்கை எம்.பிக்கள் குழு ஒன்று லண்டன் நோக்கிப் பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது!

இக்குழுவில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஹரின் பெர்னான்டோ, நிரோஷன் பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் வசந்த சேனநாயக, ஹுனைஸ் பாரூக் மற்றும் எரிக் வீர வர்த்ன போன்றோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அலர்ட் மற்றும் கொமன் வெல்த் சமூகத்தின் அழைப்பிற்கு இணங்க லண்டன் செல்லும் இவர்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள், இளம் வர்த்தகர்கள், பொதுநலவாய சங்கத்தின் உறுப்பினர்கள் என பல தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர்.

இதன்போது யுத்தத்தின் பின்னரான இலங்கையின் அரசியல் நிலவரம், அபிவிருத்திப் பணிகள், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment