Wednesday, December 7, 2011

கப்பலொன்றின் பாகங்களைத் திருடுவதற்கு முயற்சித்த எட்டு சந்தேகநபர்கள் காலி துறைமுக பொலிஸாரினால் கைது!

Wednesday,December,07,2011
கப்பலொன்றின் பாகங்களைத் திருடுவதற்கு முயற்சித்த எட்டு சந்தேகநபர்கள் காலி துறைமுக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்.

சந்தேகநபர்களிடம் காணப்பட்ட வள்ளம், படகொன்றின் என்ஜின் மற்றும் சுழியோடிகளின் சில ஆடைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment