Wednesday, December 7, 2011

மதுரையில் பஸ்சில் வெடிகுண்டு சிக்கியது: இலங்கை அகதி வாலிபரிடம் விசாரணை!

Wednesday,December,07,2011
மதுரையில் பஸ்சில் வெடிகுண்டு சிக்கியது: இலங்கை அகதி வாலிபரிடம் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருவாதவூரில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் கண்டக்டராக விருமாண்டி என்பவர் இருந்தார். பஸ் திருவாதவூரை அடுத்த இலங்கை அகதிகள் முகாம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றது. அப்போது அகதிகள் முகாமை சேர்ந்த நிஷாந்தர் (வயது25) என்ற வாலிபர் பஸ்சில் ஏறினார்.

பின்னர் பெரியார் பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிஷாசந்தர் அருகே இருந்த ஒரு பை கண்டக்டர் காலில் பட்டது. அப்போது கண்டக்டர் விருமாண்டி, நிஷாசந்தரிடம் பையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த கண்டக்டர் அப்போது அந்த பையை வாங்கி பார்த்தபோது அதில் 4 பவர் பேட்டரி, 1 டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, டைமர் கருவி மற்றும் வெடி மருந்துகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த சமயத்தில் நிஷா சந்தர் கண்டக்டரிடம் இருந்த அந்த பையை பிடுங்கி ஜன்னல் வழியாக ரோட்டோரத்தில் இருந்த கண்மாயில் தூக்கி வீசிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் பஸ்சை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல கூறினார்.

நிஷாந்தரை பஸ் டிரைவரும், கண்டக்டரும் ஒத்தக்கடை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து வெடிகுண்டு பொருட்கள் எப்படி வந்தது? எந்த இடத்தில் தூக்கி வீசினார்? என துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு டவுன் பஸ்சில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment