Thursday,December 29, 2011சென்னை:நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கடுமையாக தாக்கி பேசினார். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேயை கோடிக்கணக்கில் கருப்பு பணம் வைத்திருக்கும் நடிகர்கள் ஆதரிக்கிறார்கள். கருப்பு பணத்தில் கட்டிய திருமண மண்டபத்தில் அன்னாவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று ரஜினியை விமர்சித்தார்.
இளங்கோவன் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் ரஜினி ரசிகர்கள் மாவட்ட பொருளாளர் ரவி தலைமையில் இளங்கோவன் உருவப்பொம்மை எரித்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது இளங்கோவனை கண்டித்து கோஷங்கள் போட்டனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் என். ராமதாஸ், ஆர். சூர்யா, கே. ரவி, சைதை ஜி. ரவி, வில்லிவாக்கம் ரஜினி சுகுமார், அண்ணாநகர் ரஜினி டில்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எங்கள் தலைவர் ரஜினி நல்ல காரியத்திற்கு உதவும் விதமாக ராகவேந்திரா மண்டபத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி தந்ததை அவதூறாக பேசிய இளங்கோவனை வன்மையாக கண்டிக்கிறோம். திரையுலகிலேயே அரசுக்கு வரி பாக்கி இல்லாமல் செலுத்தி வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான் என்பதை உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறோம். கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியாதகிறீர்கள். சேதம் உங்களுக்குதான்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்ட ரஜினி காந்த் தலைமை நற்பணி மன்ற தலைவர் பைக் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் கறுப்பு பணத்தில் கட்டிய மண்டபத்தில் ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளதாக இளங்கோவன் அபாண்டமாக ஒரு பழியினை சுமத்தியதை கண்டிக்கிறோம்.
தலைவர் உழைத்த பணத்தில் கட்டியதுதான் அந்த மண்டபம். அதுவும் அவரது ஆயுட்காலத்துக்கு பின்னர் பொதுமக்களுக்கு என்றோ தானமாக எழுதி வைத்து விட்டார். இத்தோடு அவர் தலைவர் ரஜினியை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளட்டும். இல்லையென்றால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment