Thursday,December 29, 2011இலங்கை::இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய கைதிகள்விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு ஈரானிய கைதிகள்இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் குறித்த ஈரானியகைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டமைக்காக இருவரும், ஏனையகுற்றச் செயல்களுக்காக நான்பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஈரானுக்கான தூதுவர் டொக்டர்எம்.என்.ஹானி போரிற்கும், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கைதிகள் விடுதலைசெய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment