Thursday, December 29, 2011

தங்காலை சுற்றுலா ஹோட்டல் வைத்து கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் சடலத்தை:அரசாங்க செலவில் அனுப்ப நடவடிக்கை!

Thursday,December 29, 2011
இலங்கை::தங்காலை சுற்றுலா ஹோட்டல் வைத்து, கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் சடலத்தை கையளிக்கும் வகையில் அவாகளது உறவினாகளுடன் தொடர்பை மேற்கொள்ள முயற்சித்தும் அது முடியாமல் போயுள்ளது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாகச் சடலத்தை அரசாங்க செலவில் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

வெளிநாட்டவரின் உறவினர் எவரையேனும் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக சடலத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment