Tuesday, December 13, 2011

கந்தளாயில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளது!

Tuesday, December 13, 2011
இலங்கை:கந்தளாய் அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தினை உடைத்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 41 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தன்னியக்க இயந்திரம் உடைக்கப்பட்ட, 65 இலட்சத்து, 91 ஆயிரம் ரூபா பணம் நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்டமை குறிப்பபிடத்தக்கது.

No comments:

Post a Comment