Tuesday, December 13, 2011

கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

Tuesday, December 13, 2011
திருச்சூர்: கேரளாவில் மீன் பிடிக்க முயன்ற தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்களை கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரை அடுத்து உள்ளது பிளாங்கட் கடற்கரை. அந்த பகுதியில் தமிழக மீனவர்கள் 8 பேர் மீன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களை கேரள போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் வைத்திருந்த காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், மீன் பிடி வலைகள், படகில் இருந்த என்ஜின்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 8 தமிழக மீனவர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment