Sunday, December 25, 2011இலங்கை::புலிகளின் வலையமைப்பு குறித்து இராணுவத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் பிரச்சார வலையமைப்பு குறித்து இராணுவ ஊடகப் பிரிவு அண்மையில் விளக்கமளித்துள்ளது.
கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்தில் இந்த விசேட விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் இணையப் பிரச்சாரம் போன்ற தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் எவ்வாறு சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர் என்பது பற்றியும், புலிகளின் வலையமைப்பு பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் புலம்பெயர் மக்கள் என்ற போர்வையில் புலிகள் எவ்வாறு வெளிநாட்டு அரசாங்கங்களை ஏமாற்றுகின்றனர் என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment