இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதே ஐ.நா.உள்ளிட்ட மேற்குலக சக்திகளின் நோக்கமாகும் எனவே நவநீதம்பிள்ளை போன்றவர்களை நாட்டுக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது-குணதாச அமரசேகர!
Monday, December 12, 2011இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எத்தகைய தன்மையினை கொண்டிருந்தாலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதே ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக சக்திகளின் நோக்கமாகும். எனவே நவநீதம்பிள்ளை போன்றவர்களை நாட்டுக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டிற்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் தீவிரம் கண்டுள்ளன. இன்று இலங்கையை ஏதாவது வழியில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ஐ.நா. மற்றும் கனடா போன்ற நாடுகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த சவாலை அரசாங்கம் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகும் வரை மேற்படி தீய சக்திகள் இலங்கையை அவதானித்துக் கொண்டுள்ளன.
குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையை நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது.
பான் கீ மூனும் நவநீதம்பிள்ளையும் தான் தற்போது இலங்கையை மண்டியிட வைக்க சரியான கால நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கைக்கு போதுமான படை பலமும் இயற்கை வளங்களும் உள்ளன.
எனவே மேற்குலக நாடுகளில் தங்கியிருக்கும் தேவை இலங்கைக்கு கிடையாது.
ஆகவே இலங்கை அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி செயற்பட வேண்டும். குறிப்பாக இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment