Monday, December 12, 2011இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச கவனங்களையும் உள்ளடக்கியதாக திடமான பரிந்துரைகளை முன்வைத்திருக்குமென எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் கென்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்புப் பேச்சாளருமான ஜியோவ்ரி வான் ஓர்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் தமது பிரச்சினைகளை தமக்கே உரித்தான வகையில் தீர்த்துக்கொள்வார்கள் எனக் கூறியிருக்கும் அவர், சர்வதேச நாடுகளின் ஆக்கபூர்வமான ஆதரவையே இலங்கையர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்திலுள்ள இலங்கைக் குழுவின் நண்பர்கள் அமைப்பின் தலைவரான ஓர்டன், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த காலங்களில் இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களே புலிகளால் மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 30 வருட யுத்தத்திலிருந்து விடுபட்டி ருக்கும் இலங்கை நாட்டை முன்னேற்று வதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருக்கும் அவர், இலங்கையில் யுத்தம் முடிவடைந் துள்ளது. தற்பொழுது அங்கு பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கும், நல்லிணக்கம் மற்றும் அரசியல் ரீதியிலான முன்னேற்றங் களை மேற்கொள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து கடந்தகாலத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது.
தமிழ் மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட பிரிவினைவாதத்தைத் தொடர்ந்தும் கோரமுடியாது. இலங்கைக்குள்ளேயே தீர்வொன்றைக் காண்பதற்கும், நீண்டகால தீர்வொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதாகவும் அவர்கள் என்னிடம் நேரடியாக கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தபோது தெரிவித்த கருத்துக்களை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனினும், குழப்பத்தைத் தொடர்ந்தும் ஏற்படுத்தவேண்டும் என சிலர் விரும் பினாலும் பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தம்மை கிளர்ச்சியாளர்கள் விட்டுச்சென்றுள்ள நிலையில், தமது நாடு முன்னேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
இவர்கள் தமது நாட்டுக்குத் திரும்பி அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டுகொள்ள வேண்டும். வியாபார நட வடிக்கைகளில் முதலிட முன்வரவேண்டும். வெளிநாடுகளில் சேர்க்கப்பட்ட நிதிகளில் மிகவும் குறைந்தளவு மாத்திரமே இது வரை இவ்வாறான ஆக்கபூர்வமான பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை மாறவேண்டும்.
அதேநேரம், இலங்கையில் புதிய அரசியல் தீர்வொன்று எட்டப்படவேண்டும். இதற்கு சர்வதேச ரீதியில் சாதகமான, உண்மையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் கென்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்புப் பேச்சாளருமான ஜியோவ்ரி வான் ஓர்டன், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து யாழ் ஆயர், பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
No comments:
Post a Comment