Monday, December 12, 2011இலங்கை::இலங்கைக்கு வருகைதந்துள்ள அவுஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.
அவுஸ்ரேலிய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை இதன்போது அவர்கள் பார்வையிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
அவர்கள் நேற்றையதினம் தினம் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று கடந்த எட்டாம் திகதி இலங்கையை வந்தடைந்த அவுஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஐந்து பேர் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்கள் நாளை மறுதினம் நாடு திரும்புவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment