Wednesday, December 28, 2011

சீனாவில் உலகின் உயரமான ஏர்போர்ட்!

Wednesday,December,28,2011
பீஜிங்: உலகின் உயரமான பகுதி திபெத். இங்குள்ள நாக் மாகாணத்தில், விமான நிலையம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 436 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சீனா அமைக்க உள்ள விமான நிலையம் உலகிலேயே அதிக உயரத்தில் அமைக்கப்படும் விமான நிலையம் என்ற சிறப்பை பெறுகிறது. தற்போது, திபெத்தின் காம்டோ மாகாணத்தில் உள்ள பாம்டா விமான நிலையம் தான், உலகின் அதிக உயரத்தில் அமைந்த விமான நிலையமாக உள்ளது.

இதைவிட 102 மீட்டர் உயரத்தில், 660 ஏக்கரில் நாக் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. சீன விமான போக்குவரத்து துறையின் திபெத் பிரிவு நிர்வாகத்தினர் கூறுகையில், ‘ரூ.1,480 கோடியில் இந்த விமான நிலையம் அமைக்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். இங்கிருந்து திபெத், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும்Õ என்றனர். திபெத்தில் 5 உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளன.

ஆனால், சீதோஷ்ணம் காரணமாக ஆண்டு முழுவதும் 2 விமான நிலையம் தான் செயல்பாட்டில் இருக்கிறது. சீனா, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளில் மேற்கு பகுதியில் உள்ள பழைய விமான நிலையங்களை புதுப்பித்தல், புதிதாக கட்டும் பணிகளை பல கோடி செலவழித்து செய்து வருகிறது.

No comments:

Post a Comment