Wednesday,December,28,2011ஆவடி: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து ஆவடி, அம்பத்தூர் பகுதியில் பல்வேறு கட்சியினர், வணிக சங்கங்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத பேராட்டம் இன்று நடந்தது.அம்பத்தூரில் நடந்த உண்ணாவிரதத்திற்கு பாமக மாவட்ட செயலாளர் கே.என். சேகர் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் க.மோகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் ஜோசப் சாமுவேல் (திமுக), சந்தானம் (பாமக), வெற்றி செல்வன் (மதிமுக), மாரியப்பன் (சிபிஐ), மதன் (புரட்சி பாரதம்), விஸ்வநாதன் (வி.சிறுத்தைகள்), அன்பு தென்னரசன் (நாம் தமிழர் கட்சி), வணிகர் சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், முகமது ஷெரிப், எவரெஸ்ட் முகமது, கண்ணப்பன், திருமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவடியில் நடந்த உண்ணாவிரதத்திற்கு வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரைராஜன் தலைமை தாங்கினார். மதிமுக மாவட்ட துணை செயலாளர் அந்திரிதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சி நகர ஒருங்கிணைப்பாளர் முகிலன், வணிகர் சங்க நிர்வாகிகள் அய்யாதுரை, வேலுசாமி, மலையாள சமாஜ நிர்வாகிகள் செரியன், சத்தியன், மனோகரன் முன்னிலை வகித்தனர்.
அனைத்து கட்சி நகர செயலாளர்கள் இநாயத்துல்லா (மதிமுக), மாதவன் (வி.சிறுத்தைகள்), ரங்கன் (புரட்சி பாரதம்), ராமன் (சிபிஐ) உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு வில்லிவாக்கம் முதல் திருநின்றவூர் வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதற்கு ஆதரவு தெரிவித்து அம்பத்தூர், ஆவடி பகுதியில் 1,500க்கு மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களும் பங்கேற்றனர். இதனால் இப்பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடவில்லை.
No comments:
Post a Comment