Saturday, December 10, 2011இலங்கை:முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் (HIGHCOPE) விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல்நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
HIGHCOPE விவகார வழக்கு மற்றும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் ஆகியன ஒரே விடயம் தொடர்பாகவே ஆராய்வதாக பிரதிவாதி தரப்பில் மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் மனுதாரர் தரப்பு சாட்சியங்களின் 214 பகுதிகள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன .
ஒரேவிடயத்திற்காக ஒருவருக்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்வது சட்டத்திற்கு முரணான விடயம் என சரத் பொன்சேக்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அடிப்படை விவாதத்தை முன்வைத்தனர்.
எதிர்த் தரப்பினால் முன்வைக்கப்படவேண்டிய அனைத்து சாட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி ருக்ஷான் நாணயக்கார குறிப்பிட்டார்.
இதனையடுத்து தானும் இரண்டு சாட்சியாளர்களின் சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பினை வழிநடத்தும் அரச வழக்கறிஞர் தமித் தொடவத்த கூறினார்.
HIGHCOPE விவகார வழக்கு விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment