Saturday, December 10, 2011

சரத் பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதே சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஆவலாக அமைந்துள்ளது-சந்திரசிறி கஜதீர!

Saturday, December 10, 2011
இலங்கை:முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதே சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஆவலாக அமைந்துள்ளது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தலைவன் என்ற ரீதியில் ஏனைய கைதிகள் உட்கொள்ளும் உணவுகளையே சரத் பொன்சேகாவும் உட்கொள்ள வேண்டும். நான் சிறையில் இருந்தால் அவ்வாறே செய்வேன். எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சரத் பொன்சேகா அவ்வாறு செய்வதில்லை நோய் என்றால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளச் செல்லும் போது, சரத் பொன்சேகா அரசாங்கத்தை திட்டித் தீர்க்கின்றார். ஊடகங்களும் பிழையான பிரசாரத்தை செய்கின்றன.

இவற்றை சிறைச்சாலை அதிகாரிகளினால் தடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா மற்றுமொரு கைதி என்றே கருதப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment