Saturday, December 10, 2011

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் UN சபையின் நிபுணர் குழு அறிக்கையும் மனித உரிமைகள் சபையில் விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் நவநீதம்பிள்ளை!

Saturday, December 10, 2011
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் என ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளார் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளரிடம் நேற்று வெள்ளிக்கிழமை (09.12.2011) நியூயோர்க்கில் வைத்து தகவல் அளித்த அவர்,

இது குறித்து, தாம் விசேட கவனத்தை கொண்டிருப்பதாகவும், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகும் வரை இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கைகளில் இருப்பதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு தெளிவான அம்சங்களை கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில்கூற ஆணையாளர் நவநீதம்பிள்ளை மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment