Sunday, December 04, 2011அரசாங்கம் தவறான வழியில் செல்லும் போது சரியான பாதையைக் காண்பிக்கும் உரிமை மகா சங்கத்தினருக்கு உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கையை மகா சங்கத்தினர் சிறப்பாக மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பலாங்கொடை பட்டபொல சுபத்திராராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
விமர்சிப்பதற்கான உரிமை மக்களுக்கு உள்ளதெனவும் அதனை எதிர்கொள்ள முடியாவிடின் அரசியலில் நீடிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் மனித நேய பயணத்தை குறுகிய அரசியல் நோக்கங்களால் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
2005 ஆம் ஆண்டில் நாட்டைப் பொறுப்பேற்கும்போது காணப்பட்ட சவால்களையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.
வடக்கின் பிரிவினைவாத புலிபயங்கரவாதம், உலக உணவு நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வெளிநாட்டு அழுத்தங்கள் ஆகிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு அரசாங்கம் இதுவரை காலம் முன்னோக்கி வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment