Sunday, December 4, 2011

தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டம்-ராமேஸ்வரம் மீனவர்கள்!

Sunday, December 04, 2011
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் செவ்வாய் அன்று சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மீனவ அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து அந்த அமைப்புகள் கூறுகையில், அப்பாவி மீனவர்களை, இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தாக்கியும் கைது செய்தும் வருகிறது. பல முறை கோரிக்கை விடுத்தும்இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளன.

No comments:

Post a Comment