Saturday, December 10, 2011

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும்-திஸ்ஸ!

Saturday, December 10, 2011
இலங்கை:தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பேராசியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. ஆகவே இரு தரப்பும் இணக்கப் பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்விற்காக பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை அரசிற்கும் தமிழ் தேசியக் கூட்மைப்பிற்கும் இடை யில் நடைபெற்றது. இதில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து கூட்டமைப்பினரால் பேசப்பட்டுள்ளது.மேற்கூறிய இரு அதிகாரங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அரச தரப்பு நிராகத்துள்ளது.

எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் முக்கியமானவையாகவே நோக்கப்படுகின்றது.

தேசிய அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு யோசனைகளில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேற்கூறிய இரு அதிகாரங்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்க டியும் என்பதே எனது நிலைப்பாடாகும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment