Saturday, December 10, 2011

பாதுக்க நகரில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்!

Saturday, December 10, 2011
இலங்கை:பாதுக்க நகரில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த கைக்குண்டுத் தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, அட்டிகல பகுதியில் கூறிய ஆயதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு எந்தக் கொலை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அட்டிகல பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு கடிகாவ பகுதியில் ஒரேஇடத்தில் மூன்று குழந்தைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment