Saturday, December 10, 2011

குவைத்தில் இலங்கைப் பெண் கொலை!

December 10, 2011
இலங்கை: குவைத்தின் தெஹரா நகருக்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் இலங்கைப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கடமையாற்றிய வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட குழுவினரால் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கைப் பெண் அங்கு கடமையாற்றிய மற்றமொரு இலங்கையருடன் இரகசிய தொடர்பிரனை பேணி வந்தமையே இந்தக் கொலைக்கு முக்கிய காரணமென கூறப்படுகின்றது.

அந்த இலங்கை இளைஞர் பலத்த வெட்டுக் காயங்களுடன் தெஹரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த சிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணைப்பதிகாரி ஹரிஸ்சந்திர படுகொடவிடம் நாம் வினவியபோது அவ்வாறான சம்பமொன்று தமக்கு பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment