Saturday, December 10, 2011

திருச்சி மாவட்டத்தில் 6 மாதத்தில் 3 பேர் மாஜி அமைச்சர்கள்!

Saturday, December 10, 2011
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் 6 மாதத்தில் 3 பேர் மாஜி அமைச்சர்களாக ஆகியுள்ளனர். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ மரியம்பிச்சை அமைச்சரானார். ஆனால் சில தினங்களிலேயே சாலை விபத்தில் இறந்தார். பின்னர் முசிறி எம்எல்ஏ சிவபதி அமைச்சரானார். இந்நிலையில் மரியம்பிச்சை மறைவையொட்டி நடந்த மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதி வெற்றி பெற்றார். அதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து சிவபதி நீக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்ட அமைச்சராக பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். இதற்கிடையே அமைச்சர் பரஞ்சோதி மீது, பெண் டாக்டர் ராணி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 7 பிரிவுகளில் திருச்சி மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பரஞ்சோதி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி மாவட்டத்தில் 6 மாதத்திற்குள் 3 அமைச்சர்கள் மாஜிக்களாக ஆகியுள்ளனர். இம்முறை பரஞ்சோதிக்கு பதிலாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால் இம்மாவட்ட அதிமுகவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment