Friday, December 9, 2011

இணையத்தளத் தடைக் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Friday, December 09, 2011
இலங்கை: இணையத்தளத் தடைக் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐந்து செய்தி இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவிற்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஜனவரி 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சட்ட மா அதிபர் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு இவ்வாறு மனு தாக்கல் செய்ய சட்ட அடிப்படை இல்லை என கூறியுள்ளார்.

எனினும் இந்த மனு தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜனவரி 24ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல் 5 செய்தி இணையத்தளங்களை தடை செய்ய அரசாங்க தகவல் திணைக்களம் எடுத்த முடிவு சட்டவிரோதமானதென அறிவிக்கும்படி கோரி சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment