Friday, December 09, 2011வெர்ஜீனியா: அமெரிக்காவில் பல்கலைக் கழகம் ஒன்றில் 2 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.
வெர்ஜீனியா மாநிலத்தில் பிளாக்ஸ்பெர்க் நகரில் உள்ள வெர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. பல்கலைக் கழக வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரும், கார் பார்க்கிங் ஏரியாவில் மற்றொருவரும் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர்.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உடனடியாக தப்பியோடி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதே பல்கலைக் கழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மனநிலை சரியில்லாத ஒரு மாணவர், 32 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment