Sunday, December 11, 2011

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்ததியாகும்- மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்!

Sunday, December 11, 2011
இலங்கை::எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்ததியாகும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சுமார் 7000 இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள இடம்பெயர் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள் குடியேற்றப்படாது எஞ்சியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். எனவே இவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் அங்கு அவர்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 40 பேர்சஸ் காணிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வீடுகளை அமைப்பதற்கு 20 பேர்சஸையும், விவசாயத்திற்கு 20 பேர்சஸையும் பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார். மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியானதன் பின்னர் மீள் குடியேற்ற அமைச்சின் பணிகள் முடிவுறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment