Sunday, December 11, 2011

தீயணைப்பு வசதிகள் இருக்கிறதா? எய்ம்ஸ் உள்பட 7 மருத்துவமனைகள் அறிக்கை அளிக்க உத்தரவு!

Sunday, December 11, 2011
புதுடெல்லி : தீயணைப்பு வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எய்ம்ஸ் உள்பட 7 மருத்துவமனைகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள 7 மாடி தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூச்சு திணறியும், தீயில் கருகியும் 91 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில், தீயணைப்பு வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் எதிரொலியாக, நாட்டில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு, தீயணைப்பு வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் பி.கே.பிரதான், எய்ம்ஸ், ஜிப்மர், நிம்ஹன்ஸ், லேடி ஹார்டின்ச் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சப்தார்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மற்றும் சண்டிகாரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையின் இயக்குநர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசோதித்து, ஒத்திகைகள் நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘Ôஅரசு மருத்துவமனைகளுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். அனைத்து பெரிய அரசு மருத்துவமனைகளிலும் தீயணைப்பு வசதிகள் முழுமையாக உள்ளதா என்பதை சோதித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளோம். தீ விபத்தின்போது நோயாளிகளை காப்பது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கும்படி கூறியுள்ளோம்ÕÕ என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தேகா கூறும்போது, ‘மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதனை செய்ய மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷர்மா தலைமையில் டாக்டர்கள், இன்ஜினியர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளோம். பல கட்டிடங்கள் 1956, 57களில் கட்டப்பட்டவை. கமிட்டி நாளை முதல் ஆய்வு செய்கிறதுÕÕ என்றார்.
சமீபத்திய ஆய்வில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் உள்பட 27 பெரிய மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுக்கும் வசதிகள் மோசமாக இருப்பது தெரியவந்தது குறிப்ப¤டத்தக்கது.

No comments:

Post a Comment