Sunday, December 11, 2011இலங்கை::எதிர்வரும் 2012ம் ஆண்டு நடுப்பகுதியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல முன்னாள் புலி உறுப்பினர்களையும் விடுதலை செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 700 பேருக்கு கட்டாய ஓராண்டு கால பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், பயிற்சி நிறைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஓராண்டு கால பயிற்சியை பூர்த்தி செய்த மேலும் 46 உறுப்பினர்கள் நாளைய தினம் சமூகத்துடன் இணைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
20 துறைகளில் முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சுய தொழில் கடனாக 250,000 ரூபா வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், நிறைவின் போதும் சுமார் 11700 உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர்.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் பணிகளுக்காக வருடாந்தம் 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment