Sunday, December 11, 2011

பாலிவுட்டில் குழந்தை காலம் நடிகை ஷில்பா கர்ப்பம்!

Sunday, December 11, 2011
புதுடெல்லி: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில்தான் குழந்தை பெற்றுக் கொண்டார்.
அதேபோல், குழந்தை பேறு இல்லாமல் இருந்த பிரபல நடிகர் ஆமிர்கானின் 2வது மனைவி கிரண் ராவ், கடந்த 1ம் தேதி வாடகை தாய் முன் ஆண் குழந்தை பெற்றுக் கொண்டனர். இதற்கு பெயர் சூட்டும் விழாவை ஆமிர்கான் நேற்று நடத்தினார். குழந்தைக்கு ஆசாத் ராவ் கான் என்று பெயர் சூட்டப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் மவுலானா ஆசாத்தின் வம்சத்தை சேர்ந்தவர் ஆமிர்கான். அதனால், குழந்தைக்கு அவருடைய பெயரையே முதலில் சேர்த்து வைத்துள்ளார். 46 வயதாகும் ஆமிருக்கு, தனது முதல் மனைவி ரீனா தத்தா மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இதற்கிடையே, நடிகைகள் வரிசையில் சிரிப்பழகி ஷில்பா ஷெட்டியும் கர்ப்பம் அடைந்துள்ளார். 36 வயதாகும் ஷில்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் டி20 கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இவர் தனது வியாபார பங்குதாரர் ராஜ் குந்த்ராவை 2009ல் மணந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷில்பாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இப்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். ‘எங்கள் குடும்பத்துக்கு புதிதாக ஒருவர் வரப் போகிறார். நான் கர்ப்பமாகி இருப்பது உறுதியாகி விட்டது. எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்’ எனது தனது டிவிட்டர் வலைதளத்தில் ஷில்பா கூறியுள்ளார்.
நடிகை லாரா தத்தா, செலினா ஜெட்லி ஆகிய பாலிவுட் பிரபல நடிகைகளும் இப்போது கர்ப்பமாக உள்ளனர்.

No comments:

Post a Comment