Friday, December 09, 2011இலங்கை:நோர்வே தூதுவர் ஹரஸ்டாட் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். நோர்வே அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது. இவ்வாறு இலங்கை பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளாரை சந்தித்து, பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
போர் நிறைவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக நோர்வே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுக்க உதவிகளை வழங்குமாறு நோர்வே தூதுவரிடம், பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரியுள்ளார்.
இதேவேளை, நோர்வே அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது.
அத்துடன் அந்த அரசாங்கம், வடக்கு உள்விவகாரங்களில் மீண்டும் தலையீடு செய்ய முயற்சித்து வருவதாகவும் புளொட் அமைப்பின் நோர்வே பொறுப்பாளர் ராஜசிங்கம் என்பவர் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment