Tuesday, December 13, 2011இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான கரு ஜயசூரிய கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கும் அதேவேளை பாராட்டுக்குரியதும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் யுத்த காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கருஜயசூரிய வழங்கிய ஒத்துழைப்பினையும் தேரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.கரு ஜயசூரிய இன்று காலை மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பெடுவாவெ ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த போது, தேரர்கள் கரு ஜயசூரியவின் தீர்மானத்திற்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
அதேபோன்று தற்போது மீண்டும் கட்சியில் இணைந்துள்ள கரு ஜயசூரியவிற்கு கட்சியை கட்டியெழுப்புவதற்கு முடிந்துள்ளதாக தேரர்கள் தெரிவித்தனர்.அரசாங்கத்துடன் இணைந்த சந்தர்ப்பத்தில் கரு ஜயசூரியவுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக இதன்போது மல்வத்து மகாநாயக்க தேரர் கூறினார்.இதேவேளை கரு ஜயசூரிய, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.கரு ஜயசூரிய எடுத்த தீர்மானத்திற்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.
No comments:
Post a Comment