Tuesday, December 13, 2011

புதுடில்லி பார்லி அட்டாக் 10வது நினைவுநாள்:அப்சல்குரு தூக்கு தாமதம்:தியாகிகள் குடும்பத்தினர் அதிருப்தி!

Tuesday, December 13, 2011
புதுடில்லி: இந்திய திருநாட்டின் ஜனநாயகத்தை ஆட்டி பார்த்த நாள் 2001 டிச.13 அந்த நாளில் பார்லி.,யில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 9 பேரை கொன்றனர். இதில் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டாலும், சிலர் தண்டனை பெற்றாலும் முக்கிய குற்றவாளி அப்சல் குருவை இன்னும் தூக்கிலிடாமல் காலம் தாழ்த்துவது ஏன் என வீரச்சாவு அடைந்த தியாகிகளின் குடும்பத்தினர் கேட்கின்றனர்.

10 ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பார்லியில்., வீர மரணமடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சபாநாயகர் மீராகுமார், ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதில் தியாகிகளின் குடும்பத்தினர் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டனர். அப்சல் குருவை தூக்கிலிட்டால் தான் எங்களுக்கு உண்மையான வெகுமதி கிடைத்ததற்கு சமம். எனவேதான் இறந்தவர்களுக்கென வழங்கப்பட்ட வீர பதக்கத்தை வாங்க மறுத்து வருகிறோம் என்றார் பாதிக்கப்பட்ட ஒருவரது மனைவி.

ஜனாதிபதி ஏன் தாமதிக்கிறார்: இந்த விவகாரத்தில் அப்சல் குருவின் கருணை மனுவை சுப்ரீம்கோர்ட் நிராகரித்து தற்போது ஜனாதிபதியின் கோப்பில் தேங்கி கிடக்கிறது. இன்னும் கருணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்க மனம் வரவில்லையா என உயிரிழந்த தியாகிகள் குடும்பத்தினர் சந்தித்து கேட்டுள்ளனர். உள்துறை அமைச்சகம் கருணை மனுவை தள்ளுபடி செய்ய பரிந்துரைத்து கோப்புகளை அனுப்பி விட்டது . ஜனாதிபதிதான் சிக்னல் கொடுக்க வேண்டும்.

இது குறித்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் கூறுகையில்: சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.

அப்சல் குருவின் கருணை மனு-ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் 3 பேரில் ஒருவரின் மனு உள்ளிட்ட பரிசீலனையில் உள்ளது!
புதுதில்லி, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முன்பு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008-11-க்கு இடைப்பட்ட காலத்தில் ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் 3 பேரில் ஒருவரின் மனு உள்ளிட்ட 27 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 10 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அப்சல் குரு உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment