Tuesday, December,27, 2011இலங்கை::அமைதித் தீர்வு தொடர்பாக இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகளை இலங்கை அரசு முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக நேற்று பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:-
நியாயமான அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வழங்குவதில் எமது அரசு உறுதியாக இருக்கின்றது. எமது இந்த நிலைப்பாட்டை இந்தியாவும் மதிக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி நாம் நிச்சயமாகத் தீர்வொன்றைக் காண்போம். எமது செயற்பாடுகள் குறித்து நாம் இந்தியாவுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்தி வருகிறோம்.
மனித உரிமை மீறல்கள், இறுதிப் போரின்போது இடம்பெற்றிருக்குமானால், அது குறித்து விசாரணை நடத்த எப்போதுமே தயாராகவே இருக்கின்றோம். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எமது நிலைப்பாடு தெளிவானது.
யாராவது தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படும். இலங்கையில் அமைதித் தீர்வு ஏற்படுவது தொடர்பாக இந்தியா காட்டும் அக்கறையை நாம் மதிக்கின்றோம்
இவ்வாறு பிரதி வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment