Tuesday, December 27, 2011

ஊழலுக்கு எதிரான அமைப்பின் சென்னை கிளை சார்பில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் உண்ணாவிரதம்!

Tuesday, December,27, 2011
சென்னை:ஊழலுக்கு எதிரான அமைப்பின் சென்னை கிளை சார்பில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் உண்ணாவிரதம்.

ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை கிளை சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான இந்த திருமண மண்டபத்தை 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போராட்டக் குழுவுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவுவது நாட்டிற்கு தான் செய்யும் சேவை என கூறியுள்ளதாக போராட்டக்குழு உறுப்பினர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment