Tuesday, December 27, 2011

புலிகள் ஆதரவாளர்களின் ஈழப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, December,27, 2011
இலங்கை::புலிகள் ஆதரவாளர்களின் ஈழப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்களின் சார்பில் கலாநிதி காமினி குணதிலக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

புலிகளின் தமிழர் தாயகம் என்ற மாயையை களைவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலியான பிரசாரங்களினால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் புலிகளின் போலிப் பிரச்சாரங்களுக்கு எதிராக முடிந்தளவு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சும், அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

புலி பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததனைப் போன்றே அரசாங்கத்தின் பிழைகளும் திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை வாழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்ற செய்தியை உலக சமூகத்திற்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒர் சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கலாநிதி காமினி குணதிலக்க திவயின பத்திரிகைக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment